2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

‘காதலரை மீட்டெடுக்க சூனியத்தை நாடினேன்’

Editorial   / 2025 டிசெம்பர் 16 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஹிந்தி தொலைக்காட்சி தொடர்கள், பாலிவுட் படங்கள், வெப் தொடர்களில் நடித்து வருபவர் நடிகை திவ்யங்கா திரிபாதி. முன்னதாக திவ்யங்கா, நடிகர் சரத் மல்கோத்ராவை காதலித்தார். இருவரும் 8 வருட டேட்டிங்குக்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஆனாலும் சரத் மீது திவ்யங்கா தீவிர காதலில் இருந்ததால் அவரை மீண்டும் தனது வாழ்க்கைக்குள் கொண்டு வர தயாராக இருந்தார்.

இந்நிலையில் தனது காதல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- காதலைக் காப்பாற்றவும், சரத்தை மீண்டும் தனது வாழ்க்கைக்குள் கொண்டு வரவும் சூனியத்தை நாடினேன். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின் இவர், 'ஏ ஹை மொஹப்பத்தைன்' என்ற ஹிந்தி சீரியலில் தன்னுடன் சேர்ந்து நடித்த விவேக் தாஹியாவை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X