Editorial / 2025 ஜூன் 16 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம், தாயகச் செயலணியினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம், திருக்கோயில் தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக திங்கட்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டது.
“செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு சர்வதேச மேற்பார்வையுடன் நீதி விசாரணை வேண்டும்”, “உகந்தை முருகன் ஆலய வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும்”, “மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தர விவகாரம்”,“வட்டமடு மேய்ச்சல்தரை”,“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களுக்கான நீதி”, “யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான நீதி”, ”அரசியல் கைதிகள் விடுதலை”,“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குதல்“,“ சட்டவிரோத காணி அபகரிப்புகள்” போன்ற பல விடயங்களை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளரின் செயலாளர் போராட்டத்தை குழப்பியதோடு போராட்டத்தில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்கள்,தாய்மார்கள், மற்றும் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் ஆகியோரோடு வாய்த்தர்க்கத்தில ஈடுபட்டார் அவர்களைத் தாக்க முற்பட்டு எச்சரித்ததோடு போராட்டத்தையும் குழப்பினர்.






கஜானா சந்திரபோஸ்
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025