Freelancer / 2023 மார்ச் 22 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, எம்.கிருஸ்ணா
பொகவந்தலாவை, லொய்னோன் கெசல்சமுவ ஓயாவில் இருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று புதன்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
மரக்கறித் தோட்டத்தில்வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸார் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் பணிப்புரைக்கு அமைய கெசல் கமுவ ஒயாவில் இருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இவ்வாறு மீட்கப்பட்ட சிசு ஏழு மாதங்களில் பிறந்த குழந்தையென ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சிசுவின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .