2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஆளுநர் கப்ராலை அழைக்குமாறு கோரிக்கை

Freelancer   / 2021 டிசெம்பர் 04 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரை அமைச்சரவைக்கு அழைக்குமாறு அரசாங்க அமைச்சர்கள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற வராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொலர் தட்டுப்பாடு காரணமாக பொருளாதாரத்தில் பல பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொலர் நெருக்கடிக்கு தீர்வுகாண அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டுமெனவும் அதற்கு முன்னதாக அமைச்சர்களுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் எனவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அழைக்கப்படுவார்கள் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .