Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி, இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.
இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு வழங்க முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதியிடம் உறுதியளித்த ஐ.நா பொதுச் செயலாளர், இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியான அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம், பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி ஆரிப் அல்வி மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசேப் தயிப் எர்டோகான், ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, தமது கவலையை தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago