2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்து எம்.பி.க்களால் இலங்கை எம்.பி.களுக்கு கருத்தரங்கு

Kogilavani   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தப்படும் விசேட கருத்தரங்கு, இன்று திங்கட்கிழமை (15) ஆரம்பமாகிறது. நாடாளுமன்றத்தின் 1ஆவது செயற்குழு அறையில், மூன்று நாட்கள் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கில், கண்காணிப்புச் செயற்குழுப் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது. 

சட்டமூலங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும், இதன்போது விளக்கமளிக்கப்படும் என்றும் இந்த கருத்தரங்கில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X