2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

இடம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க நடவடிக்கை

Nirosh   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் மண்சரிவு அபாய எச்சரிக்கையால் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு எச்சரிக்கையால் இடம்பெயர்ந்துள்ள, கந்தப்பளை கொங்கோடியா மத்திய பிரிவு தோட்டத்தில் உள்ள பாடசாலையில் 33 குடும்பத்தினரும், எதர்செட் தோட்டப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள 14 பேர் உள்ளிட்ட மொத்தமாக 47 பேருக்கு இன்று உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மறு அறிவித்தல் வரும்வரையில் இவர்களைப் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும், மேலதிக உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச கிராம உத்தியோகத்தர் ஜே.இருதயராஜ் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X