Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
முத்துராஜவெல சரணாலயப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு விதித்திருந்த இடைக்காலத் தடையுத்தரவை, நவம்பர் 2ஆம் திகதி வரை நீடித்து, உயர்நீதிமன்றம், நேற்று (21) உத்தரவிட்டது.
கொழும்பு மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை முத்துராஜவெல சரணாலயப் பகுதியில் கொட்டுவதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி, முத்துராஜவெல சரணாலயத்தை அண்மித்து வசிக்கும் 35 குடியிருப்பாளர்களால், உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு, நீதியரசர்களான புவனே அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, கொழும்பு மாநகர சபைக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டது.
அந்த மனுவில், கொழும்பு மாநகரசபை, கொழும்பு மாநகரசபையின் ஆணையாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை, வத்தளை பிரதேசபை மற்றும் ஏனைய ஆறு தரப்பினர், பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
பிரதிவாதிகளின் இந்த நடவடிக்கையால், முத்துராஜவெல சரணாலயத்தை அண்மித்துள்ள குடும்பங்கள் பாதிக்கப்படும் என மனுதார்களால் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கமநல அபிவிருத்தி அலுவலகத் தகவல்களின் அடிப்படையில், 635 ஏக்கர் நெற்செய்கை நிலமும் 7,000 ஏக்கர் சதுர்ப்பு நிலமும் காணப்படுவதாக, மனுதாரர்களால் குறிப்பிடப்பட்டிருந்து.
குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு, பிரதேசவாசிகள், சூழலியலாளர்கள், மதத் தலைவர்களால், கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வந்ததுடன், குப்பைகொட்டும் நடவடிக்கையின் காரணமாக, நீர்கொழும்பு வலயம் மற்றும் முத்துராஜவெல நீரேந்துப் பகுதிகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சட்டத்தரணி சுனில் குரே, மனுதாரர் சார்பிலும் சட்டத்தரணி சேனானி தயாரத்ன கொழும்பு மாநகர சபை சார்பிலும் ஆஜராகியிருந்ததுடன், சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜெய் ரத்னம் ஆஜராகியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
28 minute ago
33 minute ago