2025 ஜூலை 17, வியாழக்கிழமை

‘இடை நடுவே தொற்றாளர் இல்லை’

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 நோயாளர்கள், இடைக்கிடையே அடையாளம் காணப்படவில்லை என்றும் ஒரு தொடர் சங்கலியாகவே நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்று நோயாளருக்கும் எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டிருந்தது என்றும் பின்னரே, ஏற்கெனவே கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவருடன் ஒரு வகையில் தொடர்பிருந்தமையால் இந்நோய் ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“கொவிட்- 19 வைரஸ், எங்கிருந்தோ வந்துவிடாது. அதற்கென்று ஒரு வேர் தொடக்கம் உள்ளது. அடையாளம் காணப்பட்ட நோயாளியின் தொடர்பு சங்கிலி தொடர்பாக ஆராயும்போதே, அந்த நோய் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் தெரிந்துகொள்ள முடியும். எனவே, இடைக்கிடையே நோயாளர்கள் இனங்காணப்படமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

இதேவேளை, தற்போதைய நிலையை சமாளிப்பதற்கு, இலங்கை நன்றாக செயற்பட்டு வருவதாக உறுதியளித்த அவர், எவ்வாறாயினும், இந்த வைரஸை முற்றாக ஒழிப்பதற்கு, மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் கூறினார்.

சமூகத்தில் ஒரு சிறிய சமுதாயம் பொறுப்பற்று நடந்துகொண்டாலும் அது ஆபத்தானதாவே அமையும் என்றும் 1 சதவீதமான மக்கள் கூட, பொறுப்புணர்வு இல்லாமல் நடந்துகொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X