Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
R.Maheshwary / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீ.கே.ஜி. கபில
இத்தாலிக்கு தொழிலுக்காகச் சென்ற இலங்கையர் ஒருவரின் சடலம், விமானம் மூலம், கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது.
தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு,தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என நம்பப்படும் இவர், நெதும்கமுவ-குடுமிரிஸ்லந்த பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், 2004ஆம் ஆண்டிலிருந்து ரோமில் உள்ள கொல்ப் மைதானத்தை பராமரிக்கும் தொழில் ஈடுபடடு வந்துள்ளாரென்றும் மார்ச் மாதம் 9ஆம் திகதி, இவர் தங்கியிருந்த அறை, திடீரென இத்தாலி பொலிஸாரால் பரிசோதனை செய்யப்பட்ட போது, அங்கு துப்பாக்கிகள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், தனது அறைக்குச் சென்ற குறித்த இலங்கையர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாரென்றும் இதனையடுத்து நேற்று மாலை 6.30 மணியளவில் இவரது சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
13 minute ago
19 minute ago