2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

’’இது நடந்திருக்கக்கூடாத ஒன்று’’

Simrith   / 2025 மே 04 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி மே தின பேரணிக்காக கொழும்பு நோக்கிச் செல்லும் பேருந்துகள், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விமர்சித்தார், மேலும் பொறுப்பானவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், பேருந்துகளை அங்கு நிறுத்த அனுமதித்த ஓட்டுநர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அதை ஆதரித்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

"இது நடந்திருக்கக்கூடாத ஒன்று" என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு பேருந்திற்கும் பொறுப்பாக ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட பேருந்துகளுக்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பாளர்களின் விபரத்தைக் கேட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X