2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி - டோ லாம் இடையில் சந்திப்பு

Janu   / 2025 மே 04 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை ( Tô Lâm) சந்தித்து கலந்துரையாடினார்.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான 55 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X