Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஒக்டோபர் 24 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
புலனாய்வுத் தகவல்களின்படி, வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அச்சுறுத்தல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல் முதலில் ஒக்டோபர் 7 ஆம் திகதி பெறப்பட்டதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார்.
வெளிநாட்டு பிரஜைகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் கூறினார்.
இரண்டு இலங்கையர்களில் தாக்குதலை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒருவர் ஈராக்கைத் தளமாகக் கொண்டவர் எனவும் கூறப்படுகிறது.
இவர்களுக்கு சுமார் ரூ.5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் உட்பட அனைத்து தொடர்புடைய தகவல்களையும் இலங்கை அதிகாரிகளுக்கு இந்திய புலனாய்வு அமைப்புக வழங்கியுள்ளன.
அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கு பழிவாங்கும் வகையில் அறுகம்பேயில் இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (a)
2 hours ago
3 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
19 Jul 2025