Janu / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியைக் பார்பதற்காக, 15 விசேட தனியார் ஜெட் விமானங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள பெருமளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இந்த விமானங்கள் பெப்ரவரி 14ஆம் திகதி முதல் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மேலும் பல நாடுகளில் இருந்து வருகை தந்திருந்தன.
குறித்த விமானங்கள் மூலம் பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவர் ஜே. ஷா மற்றும் பல கோடீஸ்வர வர்த்தகர்களும் வருகை தந்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் தற்போது தாம் வந்திறங்கிய அதே விமானங்களிலேயே மீண்டும் நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டி.கே.ஜி.கபில
28 minute ago
31 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
31 minute ago
40 minute ago
2 hours ago