2025 நவம்பர் 01, சனிக்கிழமை

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட அறிவித்தல்

Editorial   / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக எதிர்வரும் 03ஆம் திகதி முதல் நேரடியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டியிலுள்ள உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள துணை தூதரகம் ஆகியவற்றினால் குறித்த சேவைகள் முன்னெடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது.

விசா உள்ளிட்ட சேவைகளை முன்னெடுத்த IVS Lanka என்ற நிறுவனத்துடனான ஒப்பந்தம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய, விசா உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான புதிய முன்பதிவுகளுக்கான புதிய இணையத்தள இணைப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X