2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை

Kanagaraj   / 2016 மே 31 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து ஆலயங்களில் மிருக பலி கொடுப்பதற்கான தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளது.

இந்துசமய மற்றும் கலாசார அலுவர்கள் திணைக்களம், இது தொடர்புடைய சட்டத்தை ஏற்கெனவே தயாரித்துள்ளதாகவும் அதற்குச் சட்டவரைஞர் திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

சமய சடங்குகள் என்ற அடிப்படையில், மிருகபலி கொடுப்பதற்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் போன்ற பகுதிகளில், இந்து ஆலயங்களில் இவ்வாறு மிருகபலி செய்யப்படுவது குறைவில்லாமல் இருந்தது. இதற்கு எதிராக, பல்வேறு அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகள் குரல் எழுப்பியிருந்தனர்.

அம்மன், பைரவர், முனியப்பர், காத்தவராயர், ஐயப்பன், வீரபத்திரர், பத்திரகாளி அம்மன் போன்ற தெய்வங்களை குலதெய்வமாக வழிபாடு செய்யும் கிராமப்புற ஆலயங்களிலேயே, இவ்வாறான மிருகபலி கொடுக்கும் சடங்குகள் செய்யப்படுகின்றன. குறித்த கிராமங்களின் பாதுகாவல் தெய்வங்களுக்காக, ஆடு, மாடு, கோழி போன்றவற்றை பலி கொடுக்கின்றனர்.

மாடுகளை பலி கொடுப்பது தற்போது பல ஆலயங்களில் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் ஆடுகள், கோழிகளை பலி கொடுக்கும் வழக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .