2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இந்தியப் பிரஜைகள் ஐவர் மீது தாக்குதல்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், கிரியுல்ல லோலுவாகொட மின்சார வேலைத்திட்ட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய பிரஜைகள் ஐவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடமைகளை முடித்துக்கொண்டு தாங்கள் தங்கியிருக்கும், மீரிகம ஹகுருகும்புர பிரதேத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே இனந்தெரியாதவர்கள் இந்த ஐவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் எதுவும் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X