2021 மே 14, வெள்ளிக்கிழமை

இன்னொரு தடுப்பூசி பற்றிய ஆராய்வு

Gavitha   / 2021 மார்ச் 01 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசியை இலங்கையிலும் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

ஒருதடவை மட்டும் செலுத்தப்படும் குறித்த ஜான்சன் & ஜான்சனின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு, அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இது அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மூன்றாவது தடுப்பூசியாகும்.

ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசி செலவு குறைந்ததாக உள்ளதுடன், உறைவிப்பானுக்கு பதிலாக குளிர்சாதன பெட்டியில் சேமிக்க முடியும்.

இருப்பினும், ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பத்தைப் பெறவில்லை என்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரதான பணிப்பாளர் வைத்தியர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .