2026 மார்ச் 19, வியாழக்கிழமை

இன்றிரவு ஜனாதிபதி விசேட உரை

Editorial   / 2026 மார்ச் 17 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசாங்கம் அதனை எதிர்கொள்ளும் விதம் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளதாகச் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   செவ்வாய்க்கிழமை (17)  உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில்:

  "நாட்டின் தற்போதைய சவாலான சூழ்நிலையை அரசாங்கம் எப்படிக் கையாண்டு வருகின்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை ஜனாதிபதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைப்பார்."

  "அதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17ஆம் திகதி) இரவு 7:30 மணிக்கு ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றைச் செய்யவுள்ளார்" எனவும் சபை முதல்வர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .