Freelancer / 2026 ஜனவரி 05 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதலாம் தரம் மற்றும் 6 ஆம் தரம் தவிர்த்து பாடசாலைகளின் ஏனைய தரங்களுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று (5) முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தரம் 6 இன் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி 2026 ஜனவரி மாதம் 21 ஆக இருப்பினும் புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 6 இற்கு பிற பாடசாலைகளிலிருந்து மாணவர்களை அனுமதிப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகள் ஜனவரி 05 முதல் ஆரம்பிக்கும் வாரத்தினுள் மேற்கொள்ளப்படலாம் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தரம் ஒன்றிற்கான பிள்ளைகளை இனங்காணும் செயன்முறை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதுடன், உத்தியோகபூர்வமாக கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. R
33 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago