2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இன்று முதல் 'விபத்துத் தடுப்பு வாரம்' ஆரம்பம்

S.Renuka   / 2025 ஜூலை 07 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று திங்கட்கிழமை (07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை செயற்படுத்தப்படவுள்ளதடன்,  விபத்துகளைக் குறைப்பதற்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை பல பொது விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

இன்று திங்கட்கிழமை (07)  வீதி விபத்துத் தடுப்பு நாளாகவும், நாளை 8ஆம் திகதி பணியிட விபத்து தடுப்பு நாளாகவும், நாளை மறுதினம் 9ஆம் திகதி வீடு மற்றும் முதியோர் இல்ல விபத்துத் தடுப்பு நாளாகவும், ஜூலை 10ஆம் திகதி நீரில் மூழ்கும் விபத்துகளைத் தடுக்கும் நாளாகவும், ஜூலை 11ஆம் திகதி பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல் நேரப் பராமரிப்பு மையங்களில் விபத்துகளைத் தடுப்பதற்கான நாளாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்தக் காலகட்டத்தில், விபத்துத் தடுப்புக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், விபத்துகளால் இந்த நாட்டில் ஆண்டுதோறும் 10,000-12,000 பேர் இறக்கின்றனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த விபத்துகளால் ஏற்படும் வருடாந்திர இறப்புகளில், 7,500-8,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே இறக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விபத்து தடுப்பு பிரிவின் தலைவரும், சமூக மருத்துவ நிபுணர் சமிதா சிறிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .