2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

’இனவாதத்தை யாழில் ஜனாதிபதி தூண்டுகிறார்’

Freelancer   / 2026 ஜனவரி 23 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு சென்று இனவாதத்தை தூண்டிவிடுகின்றார்  சிங்கள -பௌத்தர்கள் மீது ஜனாதிபதிக்கு அப்படி என்ன கோபம் எனக்கேள்வி எழுப்பிய   ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர,  சிங்கள பௌத்த மக்களை அரசாங்கம் பழி வாங்குகின்றது  குற்றம்சாட்டினார்

 பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) அன்று இடம்பெற்ற புதிய கல்வி  மறுசீரமைப்பு   தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு  குற்றம்சாட்டினார்.
 
 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு சென்று இனவாதத்தை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார்.இது முற்றிலும் தவறு . பிரபாகரன் அவ்வாறு பேசியிருந்தால் அதனை கவனத்திற் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நாட்டின் ஜனாதிபதி எப்படி இவ்வாறு பேச முடியும்? சிங்கள பௌத்தர்கள் மீது ஜனாதிபதிக்கு அப்படி என்ன கோபம் என்று தெரியவில்லை. சிங்கள பௌத்த மக்களை அரசாங்கம் பழி வாங்குகின்றது.

இதேவேளை  தமிழரசுக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் ,சிறிய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராக பதவி வகிக்கிறார். அரசாங்கம் கொண்டு வந்த தவறான  நியமனங்களுக்கு சிறிதரன் அரசியலமைப்பு பேரவையில் ஆதரவளித்துள்ளார். அரசாங்கம் கொண்டு வரும் அனைத்து  முன்மொழிவுகளுக்கும் இவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிதரனின் செயற்பாடுகள்  பெரும் பிரச்சினையாகவுள்ளன  . இலஞ்சம் அல்லது  ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமனத்துக்கும் ஆதரவளித்துள்ளார். பாராளுமன்ற ஒழுக்க கோவையின் பிரகாரம் இவர்  விடயங்களை பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தவில்லை. இவருக்கு எதிராக  தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பூநகரி  புதுப்பிக்கத்தக்க சக்தி வலுத் திட்டம் தொடர்பில் சிறிதரன் மற்றும்  சிறிதரன் சாரங்கன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு   தமிழரசுக் கட்சி சிறிதரனுக்கு அறிவுறுத்தியுள்ளது, ஆனால் அவர் பதவி விலகவில்லை.

சிறிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படுவது  சிறிதரனின் கடமையல்ல, உண்மையில் இவர் சுய அடிப்படையில் பதவி விலக வேண்டும். இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அரசாங்கத்துக்கு சார்பாக செயற்பட்டுக்கு கொண்டு தனது தனிப்பட்ட பிரச்சினைகளை  இவர் தீர்த்துக் கொள்கிறார். அதேபோல் வரப் பிரசாதங்களையும் பெற்றுக்கொள்கிறார்.

 வடக்கு மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் சிறிதரன் செயற்பட்டுள்ளார். ஆகவே சிறிய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு அரசியலமைப்பு பேரவையில் பதவி வகிக்க சிறிதரனுக்கு எவ்வித தகுதியும் கிடையாது. ஆகவே அவர் உடனடியாக  பதவி விலக வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X