Editorial / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களைக் கடந்த உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டிஜிட்டல் தளத்தில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை அவர் மீண்டும் நிலைநாட்டியுள்ளார்.
குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ட்ரம்ப் உட்பட அடுத்தடுத்த இடங்களில் உள்ள ஐந்து உலகத் தலைவர்களின் மொத்த பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையைச் சேர்த்தாலும், அது மோடியின் தனிப்பட்ட எண்ணிக்கையை விடக் குறைவாகவே உள்ளது.
சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி, சர்வதேச நிறுவனங்களின் அங்கீகாரக் கருத்துக்கணிப்புகளிலும் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.
1. மார்னிங் கன்சல்ட் (Morning Consult - பெப்ரவரி 2026 தரவு): அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' பிப்ரவரி 2 முதல் 8 வரை நடத்திய ஆய்வின்படி, 67 சதவீத அங்கீகாரத்துடன் மோடி முதலிடத்தில் உள்ளார். செக் குடியரசின் ஆண்ட்ரேஜ் பாபிஸ் (59%) இரண்டாம் இடத்திலும், ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி (56%) ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (40%) 11-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
2. ஸ்டாடிஸ்டா (Statista - டிசம்பர் 2025 தரவு): கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான தரவுகளின்படி, பிரதமர் மோடி 70 சதவீத அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்.
பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவின் கலாச்சாரம், அரசுத் திட்டங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் சாமானிய மக்களுடனான உரையாடல்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவரது 'டிஜிட்டல் இந்தியா' கனவின் ஒரு பகுதியாக, சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களைச் சென்றடைவதில் அவர் காட்டும் ஆர்வம் இந்த 10 கோடி இலக்கை எட்ட மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .