Editorial / 2019 மே 06 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதுவரை செயற்பட்டதைப் போன்று பொறுமையுடனும் புத்திசாலித்தனமாகவும் இலங்கையர்கள் அனைவரும் செயற்பட வேண்டுமென, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியன்மையை அடுத்து, அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்த நிலையில், இந்த நிலையைக் கட்டுபடுத்துமாறு தான் பொறுப்பானவர்ளுக்கு அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.
எனவே கடந்த சில நாள்களாக புத்திசாலித்தனத்துடனும் பொறுமையாகவும் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலும் கத்தோலிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், ஏனைய தரப்பினரிடமும் மிகவும் பணிவுடன் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரின் செயற்பாடுகளால் கலவரமடையாமல் குறிப்பாக முஸ்லிம் சகோதரர்களுடன் ஒற்றுமையாக செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொய்த் தகவல்கள், தூண்டுதலான கருத்துகள், மக்களைத் தூண்டிவிடும் சமூக வலைத்தளங்களுக்கு இடமளிக்க வேண்டாமென்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
5 minute ago
14 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
26 minute ago