J.A. George / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இன்று (06) இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட 466 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,979 ஆக அதிகரித்துள்ளது.
முன்னாதாக இன்று காலை 220 பேர் தொற்றுக்கு உள்ளானதாக இனங்காணப்பட்டனர். இதனையடுத்து, இன்று பிற்பகலாகும் போது மேலும் 246 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் தொற்றில் இருந்து மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்பின்னர், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,266 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 700 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago