Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று (17) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இரு பதவிகளிலும் இருந்த, மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து, இன்று (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையத்திற்கு இணைக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏற்படும் வெற்றிடத்திற்கே பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த பிகேடியர் சந்தன விக்ரமசிங்க பேராதனை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர், மாத்தளை, விஜய கல்லூரி மற்றும் கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1989ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து தியத்தலாவை இராணுவ முகாமில் தனது அடிப்படை பயிற்சிகளை முடித்துக் கொண்டு இராணுவ அதிகாரியாக வெளியேறினார்.
உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பாதுகாப்புத் துறைசார்ந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்ட இவர், இறுதியாக கொரியாவிலுள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு துறை உயர் கற்கை நெறியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago