Editorial / 2026 ஜனவரி 15 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரத்மலானையில் உள்ள ஒரு கொன்கிரீட் உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களின் தங்கும் விடுதியில் கைக்குண்டுகள் மற்றும் தடைச்செய்யப்பட்ட கத்தி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக கல்கிசை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தின் முன்னாள் கமாண்டோ வீரரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய இரண்டு ஊழியர்களிடமிருந்து T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 7 ரவைகள், T-56 வெற்று ஷெல் உறைகள் இரண்டு, T-56 பயிற்சி வெடிமருந்துகள் ஒன்று , 9MM வெடிமருந்துகள் 17, கூர்மையான கத்திகள் 02 மற்றும் 01 சைக்கிள் சங்கிலியுடன் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பணிபுரியும் கான்கிரீட் நிறுவனத்தின் மேலாளர் அவர்கள் தங்கியிருக்கும் தங்குமிடத்தை வருடத்திற்கு பல முறை சோதனை செய்கிறார்,
எனினும், கிடைத்த தகவல்களுக்கு அமைய, அவர்கள் தங்குமிடத்தை புதன்கிழமை (14) அன்று திடீர் சோதனைசெய்தபோது, இந்த வெடிமருந்துகள் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் இரண்டு சந்தேக நபர்களின் லாக்கர்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
7 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
1 hours ago
1 hours ago