2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

இராணுவ உணவகங்களில் வியாபாரம் செய்ய தடை

Editorial   / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்

இராணுவத்தினரின் உணவகங்களில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்ய முற்றாக தடை செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 பருத்தித்துறை பிரதேச சபையின் 10 வது அமர்வு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது 

இந்த அமர்வில் பருத்தித்துறை பிரதேச சபையின் 9 ஆம் வட்டார உறுப்பினர் குறிஞ்சி குமரன், பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் உட்பட்ட இராணுவ உணவகங்களில் பொது மக்களுக்கு வியாபாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்ட வேண்டும் என ஒரு பிரேரணையை கொண்டு வந்தார்.

 

 

இவ் பிரேணைக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நான்கு பேர் உட்பட சபை அமர்வில் பங்கு கொண்ட அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது 

 இராணுவ உணவகங்களில் இராணுவ வீரர்களுக்கு மாத்திரமே வியாபார நடவடிக்கைகள் இடம் பெற வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .