Freelancer / 2025 நவம்பர் 30 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது நீடிக்கும் அனர்த்த நிலைமை காரணமாக, அவசர தேவைகளுக்கான இரத்தத்தைச் சேகரிப்பதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக தேசிய இரத்தப் பரிமாற்றல் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை நீடித்தால், இரத்த தேவைப் பூர்த்தி செய்வதில் பாரிய நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டு, தேசிய ரீதியில் தேவையை நிவர்த்தி செய்ய, நாடு முழுவதும் உள்ள சில முக்கிய இரத்த வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன.
தகுதிவாய்ந்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக முன்வந்து, இரத்த தானம் செய்து இந்த தேசிய நெருக்கடியைத் தீர்க்க உதவுமாறு வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். (a)
13 minute ago
22 minute ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
26 Apr 2026
26 Apr 2026