Freelancer / 2021 நவம்பர் 03 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை காரணமாக அதிருப்தியடைந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டுக்குத் திரும்பியதன் பின்னர், தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்க தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே
ஓரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் தம்மை கலந்தாலோசிக்காமல் செயலணியை நியமித்ததில் அதிருப்தி அடைவதாகவும் அண்மையில் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வியில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
நாட்டில் சட்டங்களை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட நிறுவனங்கள் இருக்கும் போது இவ்வாறான செயலணிகளை அமைப்பதில் அர்த்தமில்லை என நீதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
நீதி தீர்த்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் சட்டத்தின் பாதுகாப்பும் சர்வசாதாரணமாக வேண்டுமென்பதைக் கவனத்தில் கொண்டு, “ஒரே நாடு- ஒரே சட்டம்” என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் இந்த 13 உறுப்பினர்களைக் கொண்டு நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 26ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்விடயம் அறிவிக்கப்பட்டிருந்தரத குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago