Editorial / 2019 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபாநாயகர் பதவியை தான், இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் கரு ஜயசூரிய இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.
அத்துடன், சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதற்கு கரு ஜயசூரியவுக்கு எவ்விதமான காரணங்களும் இல்லை என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவை சிக்கலுக்கு உள்ளாக்கும் முயற்சிகளில் ஈடுபடும் குழுவினரினால் இவ்வாறான போலியான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என, சாபாநாயகர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அந்த சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
17 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
33 minute ago