2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இராணுவத் தளபதிக்கும் கிழக்கு ஆளுனர்க்கும் இடையே சந்திப்பு

R.Tharaniya   / 2025 ஜூலை 20 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையே ஒரு சுமூகமான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. 

திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு விடயங்களில் இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் பொதுமக்களுடனான அதன் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது. 

கிழக்கு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லே கும்புர மற்றும் 22 வது காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் பெரேரா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஏ.எச் ஹஸ்பர் 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .