2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத் தளபதியின் இன்னுமோர் கோரிக்கை

Freelancer   / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிப்பதன் மூலம்  கொவிட் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனைத்து குடிமக்களும் முழு ஆதரவை வழங்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அத்தியாவசிய சேவைகளுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகையை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைவரையும் இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும் மற்றொரு முக்கிய நோக்கம், இதுவரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு வழிநடத்துவதாகும் என்றும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X