Freelancer / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தடுப்பூசிகளின் பாரிய தொகை, இலங்கை இராணுவத்தின் தடுப்பூசி பரம்பலுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று (30) குற்றஞ்சாட்டியது.
வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் தடுப்பூசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது தடுப்பூசி மையங்களில் குழப்பமான சூழ்நிலையைத் தூண்டியுள்ளது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க பொதுக்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கான பொறுப்பை சுகாதார அமைச்சின் தடுப்பூசி வழங்கும் பிரிவு அல்லது தொற்றுநோயியல் பிரிவு ஏற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி முடிக்கும் வரை எங்களால் மரண எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் தொற்றா நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கினால் மரணங்களைத் தடுக்கலாம் என்று சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியது“ என்றும் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைகளை தீர்க்க சுகாதார அமைச்சு முழு கவனம் செலுத்தும் என்று வைத்திய அதிகாரிகள் சங்கம் நம்புகிறது என்று தெரிவித்த அவர்,
தற்போதைய தடுப்பூசி இயக்கத்துக்கு ஏற்ப, சுகாதார அமைச்சு தடுப்பூசி திட்டத்தை புதுப்பித்து, 30 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு சரியான முறையில் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
3 minute ago
7 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
2 hours ago
3 hours ago