Editorial / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரி - 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் துப்பாகிகளின் பாகங்களுடன் கைதுசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய்கள் இருவரும் இன்றைய தினம் மீண்டும் குருநாகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேக நபர்களை நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அவர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
குருநாகல் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் 11.40 மணியளவில் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அதன்போது, சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்து ரி -56 ரக துப்பாக்கி மற்றும் 10 ரவைகள் கைப்பற்றப்பட்டன.
இரத்தினபுரி மற்றும் கேகாலை பகுதிகளை சேர்ந்த 46 மற்றும் 37வயதுடைய இரண்டு சிப்பாய்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர்களின் வீடுகளில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, அதிகளவான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago