Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 29 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் இலங்கையும் மாலைதீவும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமல்லாமல், பொதுவான தொலைநோக்குப் பார்வையாலும் பொதுவான நோக்கத்தாலும் ஒன்றுபட்ட பங்காளிகளாக முன்னேறுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு (Dr. Mohamed Muizzu) திங்கட்கிழமை (28) இரவு குரும்பா மோல்டீவ்ஸ் (Kurumba Maldives) விடுதியில் வழங்கிய விசேட இராப்போசன விருந்தில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் நெருங்கிய நண்பராகவும் பிராந்திய பங்காளியாகவும் நீண்ட கால உறவுகளை கொண்ட அழகிய மாலைதீவுக்கு வருகை தர முடிந்தமையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவு மற்றும் வரலாற்றுத் தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago