2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இருவரை நீக்குமாறு ஐ.தே.க கோரிக்கை

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல்

எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்துக்கு (பாதீடு) முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவரை நீக்குமாறு, அக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளனர்.

அமைச்சர் பதவிகளை வகிப்பதற்கு தகுதியான நபர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி, தேசியப் பட்டியலின் ஊடாக, நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை வகிக்கின்ற அவ்விருவரையும் நீக்குமாறும் பின்வரிசை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அவ்வாறாதொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது” என்று ஐ.தே.க வின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ஹேஷான் விதானகே எம்.பி தெரிவித்துள்ளார்.  

அதன்பிரகாரம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகிய இருவரையுமே அந்தப் பதவியிலிருந்து ​நீக்குமாறும், அவர்களுக்குப் பதிலாக, ரங்கே பண்டார போன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கோரப்பட்டுள்ள​தாக அறியமுடிகின்றது.  

​ தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள அவர், மைத்திரி - மஹிந்தவை பலப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாதெனவும் தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .