2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இரு தினங்களும் மதுபானசாலைகளுக்கு பூட்டு

Princiya Dixci   / 2016 மே 05 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். நூர்தீன்

வெசாக் தினத்தையொட்டி, எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் சகல மதுபானசாலைகளையும் இறைச்சிக்கடைகளையும் மூடுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்தனசிறி, சகல மாகாண சபைகளின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 

எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதிக்குள் வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் மதுபான சாலைகள், இறைச்சிக்கடைகள், ஊன் அறுக்கும் நிலையங்கள், பந்தய நிலையங்கள் மற்றும் சூதாட்ட நிலையங்கள் என்பவற்றை மூடுமாறு அவ் அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X