Editorial / 2020 செப்டெம்பர் 11 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம்
இலங்கையில் இறப்பர் உற்பத்தியானது, ஏற்கெனவே குறைவடைந்து வரும் நிலையில், 2019ஆம் ஆண்டு இந்த உற்பத்தி மேலும் குறைவடைந்துள்ளமையால், இலங்கை வரலாற்றிலேயே, இறப்பர் உற்பத்தி மிகவும் குறைவான ஆண்டாக, 2019ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.
மத்திய வங்கியின் 2019ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையிலேயே, இத்தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதன்பிரகாரம், 2019ஆம் ஆண்டு, 74.8 மில்லியன் கிலோகிராம் இறப்பர் உற்பத்தி செய்யப்பட்டிருந்தாலும் இந்த உற்பத்தித் தொகை, 9.5 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதி காலப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான மழை, இறப்பர் பாலெடுக்கும் செயற்பாடுகளில் ஏற்பட்ட தடை, குறைந்த ஊதியம், சில இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள் இறப்பர் பாலெடுக்கும் தொழிலை கைவிட்டமை போன்றவையே இறப்பர் உற்பத்தியின் வீழ்ச்சிக்குக் காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சி காரணமாக, சிறுதோட்ட உரிமையாளர்கள், தோட்டத் தொழில் துறைகள் பாதிக்கப்பட்டன. இந்த உற்பத்தி குறைவு காரணமாக, கடந்த ஆண்டில் இறப்பரின் ஏற்றுமதி அளவு குறைவடைந்திருந்தது.
இதன்பிரகாரம், இயற்கை இறப்பரின் ஏற்றுமதி 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019ஆம் ஆண்டு, 13 மில்லியன் கிலோகிராம்களாகி, 7.0 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக குறைவடைந்த கைதொழிற்றுறையில், இறப்பரின் உற்பாட்டு நுகர்வானது, இறப்பர் தொடர்பான உள்நாட்டு உற்பத்தித் துறையின் கட்டுப்படுத்தப்பட்ட செயலாற்றம் காரணம், மேலும் குறைவடைந்திருந்தது.
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
33 minute ago
52 minute ago