2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இறுதிப் போரில் மாயமான மோட்டார் சைக்கிள் காலியில்

Editorial   / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலியில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு காலி நீதிமன்றத்தால் புதன்கிழமை (06)  அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

 இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த  ஒருவரின் மோட்டார் சைக்கிள் முள்ளிவாய்க்காலில் விடப்பட்ட நிலையில் அது படையினரின் பிடியில் இருந்து காணாமல் போயிருந்தது.

இவ்வாறு போர்க் காலத்தில் பறிபோன மோட்டார் சைக்கிளை, உரிமையாளர்  நீண்ட காலம் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 14 ஆண்டுகளின் பின்பு கடத்தல் சம்பவம் ஒன்றுடன் இந்த மோட்டார் சைக்கிள் தொடர்புபட்டு மீட்கப்பட்டுள்ளதால் உரிமையாளரை வௌ்ளிக்கிழமை  (08)  ஆஜராகுமாறு காலி நீதிமன்றம், மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X