Freelancer / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வருடம் நாட்டில் பதிவான நீர்வெறுப்பு நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு, வீதியோரங்களில் உள்ள கட்டாக்காலி நாய்கள் கடித்ததால் அல்லாமல், வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் கடித்ததாலேயே இந்நோய் பரவியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
நாய்கள், பூனைகள், அணில்கள், கீரிப்பிள்ளைகள் போன்ற விலங்குகள் கடிப்பதன் மூலம் பரவும் நீர்வெறுப்பு நோயானது ஒரு கொடிய நோயாகக் கருதப்படுகின்றது.
சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதற்கமைய, நாட்டில் வருடமொன்றுக்கு 250,000 முதல் 300,000 வரையான நாய் கடி சம்பவங்கள் மாத்திரம் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது. R
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago