2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இலங்கை குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட IMF

Freelancer   / 2025 ஒக்டோபர் 04 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்தார். 

அதே நேரத்தில், இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கொசெக் மேலும் கூறினார்.

பணவீக்கம் குறைவாகவே உள்ள நிலையில், அரசாங்க வருவாய் வசூலிப்பு மேம்பட்டு வருகிறது.

சர்வதேச இருப்புகளும் அதிகரித்து வருகின்றன. 2024க்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக அதிகரித்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

வரவு-செலவுத் திட்டத்தின் வருவாய்-மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் 2022இல் 8.2%இலிருந்து 13.5% ஆக மேம்பட்டுள்ள நிலையில், இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். மேலும், கடன் மறுசீரமைப்பு செயல்முறை அநேகமாகப் பூரணமாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, திட்டத்தின் செயல்திறன் மிகவும் வலுவாக உள்ளதாகக் கூற முடியும். விரிவான நிதித் திட்டத்தின் நோக்கங்களுக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் கூற முடியும்.

விரிவான நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வை நடத்த, எங்கள் குழு தற்போது இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறது. அதன்படி, ஐந்தாவது மதிப்பாய்வின் காலப்பகுதி குறித்து எதிர்காலத்தில் எமது குழு அறிவிக்கும்" என்று அவர் கூறினார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X