2025 மே 03, சனிக்கிழமை

‘இலங்கைக்குச் செல்ல வேண்டாம்’

R.Maheshwary   / 2021 ஜூலை 02 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுற்றுலாச் செல்வதற்கு,தமது நாட்டு பிரஜைகளுக்கு  ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதித்துள்ளது.

இதற்கமைய, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதையே ஐக்கிய அரபு இராச்சியம் தடை செய்துள்ளது.

அத்துடன், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கும் இந்த மாதம் 21ஆம் திகதி வரை, அந்நாடு  தடைவிதித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் டெல்டா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஐக்கிய அரபு இராச்சியம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X