2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பரீட்சைகள் ஆணையாளருக்கு கடிதம்

Editorial   / 2020 ஏப்ரல் 21 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்துவதாயின், அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிவிக்குமாறு, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

குறித்த சங்கம் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இரண்டு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 3 மாதங்கள் கல்வி நடவடிக்கைகள்' முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாலும், தற்போது கொரோனா வைரஸ் பரவலாலும் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக, அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X