S. Shivany / 2021 ஜனவரி 06 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஜனாபதிபதி கோட்டாய ராஜபக்ஷவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் இராஜதந்திர கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்தியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்று மாலை நாட்டை வந்தடைந்த இந்திய வெளியுறவு அமைச்சருடன் மேலும் இரு உயர்மட்ட அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026