2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை- சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள குழு நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 31 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை- சிங்கப்பூருக்கிடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில்  திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய பகுதியை அறிந்துக்கொள்வதற்காக,  அரசாங்கம் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தில் சில விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியத அவசியமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சிங்கப்பூர் விஜயத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங்கைச் சந்தித்து தெரிவித்துள்ளார்.

இதற்கமையவே இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் மலிக் சமரவிக்ரம அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .