Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 21 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற இலங்கை யாத்திரிகர்கள் சிலர் அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இலங்கை யாத்திரிகர்கள் ஜெருசலேம், நாசரேன் உள்ளிட்ட பல பகுதிகளைப் பார்வையிட சென்ற கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களென்றும் இவர்கள் தொடர்பில் அந்நாட்டு புலனாய்வுத் துறையினர் வழங்கிய தகவலுக்கமையவே இவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் குடிவரவு- குடியகல்வு சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகளுக்கமைய இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த யாத்திரிகர்கள் சட்டரீதியாகவே இஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனரெனவும் இந்த விடயம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலங்கை யாத்திரிகர்கள் நேற்று மாலை 6. 45 மணியளவில் இந்தியாவின் புதுடில்லி விமான நிலையத்திலிருந்து இந்திய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐ- 282 விமானம் மூலம் 43 பேரும், இன்று அதிகாலை ஏ.ஐ- 283 விமானம் மூலம் 10 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் மேலும் 18 யாத்திரிகர்கள் இன்று மாலை இலங்கைக்கு அனுப்பப்படுவர் என இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் குளியாப்பிட்டிய, வென்னப்புவ, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் இவர்களுள் 49 ஆண்களும் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago