Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Freelancer / 2025 ஜூலை 02 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பாலிவூட் நடிகர் ஷாருக்கான் இலங்கை வருவது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் இவர் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள City of Dreams SriLanka,
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான திட்டமான இது, அனைத்து வசதிகளையும் கொண்ட தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.
சர்வதேச தரநிலைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு கேசினோ ஹால், சூப்பர் சொகுசு Nüwa ஹோட்டல் வளாகம் மற்றும் ஷொப்பிங் மால் ஆகியவற்றைக் கொண்ட இந்த திட்டம், தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பர ஹோட்டல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது.
இலங்கையின் பொருளாதாரத்தின் மையமான கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஆடம்பர சுற்றுலா ஹோட்டல் வளாகம், சிறந்த ஹோட்டல்கள், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு, ஷொப்பிங் மற்றும் MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) அனுபவங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago