2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இலங்கை-இந்தியா இரண்டையும் இணைக்க கடல்வழிச் சுரங்கப்பாதை

Gavitha   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் கடல் வழியான சுரங்கப்பாதை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, இந்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார்
வரையான பகுதிக்கு இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தியாவின் லோக் சபையில் விசேட உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பூரண நிதி ஒத்துழைப்பு வழங்குவதாக நெடுஞ்சாலைக்ள அமைச்சர் தெரிவித்துள்ளார் .

பாலம் அமைப்பது தொடர்பில் இந்திய பிரதமர் மற்றும் இலங்கை பிரதமர்களிடையே பேச்சுவார்த்தை இடம் பெற்றுள்ளதாக இந்திய எக்கோனமிக்ஸ் டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது .

தமிழ் நாட்டின் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடலின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த நிர்மாண திட்டத்துக்கு 24 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வலய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கபடவுள்ளதாகவும் இந்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X