Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 07 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தவறிவிட்டது என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிதிச் செயலாளர் எம்.கே.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின்போது, கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டுத் தருவதாக ஜெயலலிதா தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் 3,000 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், 400 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் பட்சத்தில் இராமநாதபுரம், நாகபட்டினம், மற்றும் புதுக்கோட்டை ஆகிய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago